சர்ச்சையோடு மீண்டும் களமிறங்கும் "சண்டியர்" கமல்ஹாசன்

#Actor #TamilCinema #LANKA4 #Kamal #Movie #L4
Prasu
1 hour ago
சர்ச்சையோடு மீண்டும் களமிறங்கும் "சண்டியர்" கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'சண்டியர்' என பெயரிடப்பட்டுள்ளது. 

வீர தீர சூரன்' படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மதுரை பின்னணியைக் கொண்ட, முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த கிராமத்து கதையாக இப்படம் உருவாகிறது. சி.ஜி டி-ஏஜிங்(CG-based de-aging) மற்றும் நடனப் பாடல்கள் இல்லாமல், யதார்த்தமான தோற்றத்தில் கமல் நடிக்கிறார். 

மேலும் கமஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கமல் நடிப்பில் 2004ல் வந்த விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என்று தான் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. 

அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தினால் அந்த பெயர் விருமாண்டி என கமல்ஹாசன் மாற்றினார். 

தற்போது அதே பெயர் மீண்டும் கமல்வைத்துள்ளதால் சர்ச்சை மீண்டும் வருமா என சினிமா துறையில் கேள்வி எழுந்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!